ETV Bharat / state

அரசு மருத்தவக் கல்லூரியில் சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிப்பு! - pudukkottai govt medical college

புதுக்கோட்டை: அரசு மருத்துவக் கல்லூரியில் சுற்றுச்சூழல் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு கல்லூரி வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்
author img

By

Published : Jun 5, 2020, 6:55 PM IST

இதன்பிறகு நடந்த அரங்க நிகழ்வு தகுந்த இடைவெளியை பின்பற்றி நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர். மீனாட்சி சுந்தரம் பேசுகையில், "1972ஆம் ஆண்டு ஸ்வீடன் நகர் ஸ்டாக்ஹோமில் ஜூன் 5ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் உலக அளவில் சுற்றுச்சூழலைப் பேணுவதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரு ஆண்டுகளுக்குப் பின்பிருந்து ஜூன் 5ஆம் தேதி சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு 'இயற்கைக்கான நேரம்' என்பதை இலக்காக வைத்து பணியாற்றும்படி உலக சுற்றுச்சூழல் நிறுவனம் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பேணுவது என்பது மரம் நடுவது மட்டும் அல்ல, மாசுகளைத் தடுப்பதும் தான்.

சுற்றுச்சூழலில் இயற்கை, இயந்திரங்கள், சமூகம் என்று மூன்றுவிதமான சுற்றுச்சூழல்கள் உள்ளன. இதில் இயற்கையை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இயந்திரங்கள் மூலம் வெளியாகும் புகை மற்றும் சாயக் கழிவுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் தடுப்பதும், சமூக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் ஒவ்வொரு தனி மனிதனும் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டிய விஷயம். அந்தவகையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இந்த நிகழ்வினை நடத்தியுள்ளது" என்றார்.

இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் குறித்த மாணவர்களின் கவிதையும், குறும்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும், வருடந்தோறும் வரும் தங்களது பிறந்த நாளன்றும் ஒரு மரம் நடுவது என மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

சுற்றுச்சூழல் தினத்தையோட்டி வளாகத்தில் 400 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்குவைத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சமூக மருத்துவத் துறை உதவி பேராசிரியர் டாக்டர் சரவணன், துணை முதல்வர் டாக்டர் சுஜாதா, துணை கண்காணிப்பாளர் டாக்டர் வசந்த ராமன், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் இந்துராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.