இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும் முதல் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊர் புதுக்கோட்டை. புதுக்கோட்டையில் அவர் வாழ்ந்த வீடு தற்போது திலகவதியார் ஆதீனமாக செயல்பட்டுவருகிறது. இங்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முழு உருவ சிலை உள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறை ஒழிப்பிற்கு பாடுபட்டு அந்த முறையை ஒழித்த பெருமை அவருக்கு உண்டு. மேலும் சென்னையில் அடையாறு கேன்சர் இன்ஸ்டியூட்டில் நிறுவிய பெருமையும் அவருக்கு உண்டு.
அவரது பெயரால் தமிழ்நாடு அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தை வழங்கி வருகிறது.
இத்தகைய சிறப்புமிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 135ஆவது பிறந்த நாளான இன்று( ஜூலை 30) அவர் வாழ்ந்த வீட்டில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாவட்ட சிறை துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, திலகவதியார் ஆதீன பொறுப்பாளர் தயானந்த சந்திரசேகரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், மருத்துவர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - முத்துலட்சுமி ரெட்டியின் உருவச்சிலை
புதுக்கோட்டை: இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.