ETV Bharat / state

அமமுக நிர்வாகிகளுக்கும்,  பெண்களுக்கும் இடையே வாக்குவாதம்! - AMMK party member

புதுக்கோட்டை: வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் அமமுக நிர்வாகிகளுக்கும், அப்பகுதியில் உள்ள இரு பெண்களுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நிகழ்ந்தது. அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வாக்குவாதம்
author img

By

Published : Apr 13, 2019, 10:46 PM IST

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளராக ஆனந்த் போட்டியிடுகிறார். ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி பகுதியில் வீடு வீடாகச் சென்று அக்கட்சியினர் பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்களிக்க கோரி பிரச்சாரம் செய்தனர்.

அப்போது ஒரு வீட்டில் இருந்த பெண்கள் இந்த கட்சிக்கு நாங்கள் ஏன் ஓட்டு போட வேண்டும் என்று பல்வேறு கேள்விகளை கேட்டு நிர்வாகிகளை கதற வைத்தனர். அப்போது எடுத்த அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது, அதில் கட்சி நிர்வாகிகள் டிடிவி தினகரனின் ஆதரவு வேட்பாளர் ஆனந்த் இங்கு போட்டியிடுகிறார் அவருக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள் என்று கூறுகின்றனர்.

அதற்கு அந்தப் பெண்கள் "எதற்காக நாங்கள் பரிசு பெட்டகத்துக்கு ஓட்டு போட வேண்டும்"என்று கேள்வி எழுப்புகிறார். புதிதாக மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர் வந்து இருக்கிறார் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன் என்று அந்த நிர்வாகிகள் கூறுகின்றனர். அதற்கு அந்தப் பெண், தினகரனும், சசிகலா குடும்பமும்தான் அரசியலுக்கு வரவே கூடாது என்று ஏற்கனவே ஜெயலலிதா சொல்லி இருக்கிறார் ஆனால் ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஏன் இவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார்.

வாக்குவாதம்

அதற்கு நிர்வாகிகள் அது எல்லாம் பழைய கதை அம்மா அவர்கள் தமிழகத்திற்கு என்ன கெடுதல் செய்து இருக்கிறார்கள் என்று அந்தப் பெண்ணை பார்த்து கேட்கின்றார். அப்போது மற்றொரு பெண், செப்டம்பர் 22 அப்பல்லோ மருத்துவமனையில் அம்மாவுக்கு என்ன நடந்தது? பதில் சொல்லுங்கள் என்று கேட்க இரு தரப்புக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து அப்பகுதி பெண்களுக்கும், அமமுக நிர்வாகிகளுக்கும் காரசாரமான வாக்குவாதம் நிகழந்தது. இறுதியில் அமமுக நிர்வாகிகள் நாட்டை கெடுக்க வேண்டும் என்றால் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறிவிட்டு அவ்விடத்தில் இருந்து புறப்பட்டனர்.

Intro:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் அமமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர் அப்போது கட்சியினரை அந்த பகுதி பெண்கள் கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு வறுத்து எடுத்தனர்.இதனால் இரு தரப்புக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது..

Body:ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளராக ஆனந்த் போட்டியிடுகிறார் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி பகுதியில் வீடு வீடாகச் சென்று அக்கட்சியினர் பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்களிக்க கோரி பிரச்சாரம் செய்தனர் அப்போது ஒரு வீட்டில் இருந்த பெண்கள் இந்த கட்சிக்கு நாங்கள் ஏன் ஓட்டு போட வேண்டும் என்று பல்வேறு கேள்விகளை கேட்டு நிர்வாகிகளை கதற வைத்தனர். அப்போது எடுத்த அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது, அதில் கட்சி நிர்வாகிகள் அண்ணன் டிடிவி தினகரனின் ஆதரவு வேட்பாளர் ஆனந்த் இங்கு போட்டியிடுகிறார் அவருக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள் என்று கூறுகின்றனர்.அதற்கு அந்தப் பெண்கள் "எதற்காக நாங்கள் பரிசு பெட்டகத்துக்கு ஓட்டு போட வேண்டும்"என்று கேள்வி எழுப்புகிறார் புதிதாக மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர் வந்து இருக்கிறார் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன் என்று அந்த நிர்வாகிகள் கூறுகின்றனர். அதற்கு அந்தப் பெண்,தினகரனும், சசிகலா குடும்பமும்தான் அரசியலுக்கு வரவே கூடாது என்று ஏற்கனவே ஜெயலலிதா சொல்லி இருக்கிறார் ஆனால் ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஏன் இவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார்.அதற்கு நிர்வாகிகள் அது எல்லாம் பழைய கதை அம்மா அவர்கள் தமிழகத்திற்கு என்ன கெடுதல் செய்து இருக்கிறார்கள் என்று அந்தப் பெண்ணை பார்த்து கேட்கின்றார். அப்போது மற்றொரு பெண்,செப்டம்பர் 22 அப்பல்லோ மருத்துவமனையில் அம்மாவுக்கு என்ன நடந்தது? பதில் சொல்லுங்கள் என்று கேட்க இரு தரப்புக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடைபெற்றது.தொடர்ந்து அந்தப் பெண் ஓபிஎஸ் எனக்கு எதுவும் தெரியாது, என்றார் சசிகலா மேடம் ஆலோசனையின் பேரில்தான் எல்லாம் மருத்துவமனையில் நடந்தது என்று அனைவரும் கூறினார்கள். அங்கு எப்படி என்ன நடந்தது நிர்வாகிகளோ அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது, அம்மா நாங்கள் என்ன செய்ய ? என்று கூற அதற்கு மற்றொரு பெண் குறுக்கிட்டு அதெல்லாம் இருக்கட்டும் அங்கு என்ன நடந்தது என்று இது போன்ற சந்தர்ப்பத்தில் தான் நாங்கள் உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும் என்கிறார்.அனைத்திற்கும் காரணம் மோடி என்கிறார்.நீண்ட நேரம் பேசாமல் இருந்தார் நிர்வாகி ஒருவர். அதற்கு அந்தப் பெண், மோடி தான் காரணம் என்றால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான போது மோடிக்கு ஆதரவு கொடுக்க போவதாக அறிவித்து அது ஏன்? என்று கேட்க நாங்கள் ஆதரவு ஏதும் கொடுக்கவில்லை அதற்கு ஆதாரம் இருக்கிறதா "நாட்டைக் கொடுக்க வேண்டுமென்றால் மோடிக்கு உங்கள் ஓட்டு போடுங்கள்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர் அப்போது அவர்களை பெண்கள்,நாங்கள் ஏன் நாட்டைக் எடுக்க வேண்டும் ஆர்.கே நகரில் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியாதா! என்று கூற ஆர்.கே நகரில் யார் வெற்றி பெற்றது என்கிறார்கள் அந்த நிர்வாகிகள்."ஆமா ஆமா 20 ரூபாய் கதை எங்களுக்கு தெரியும்" என்று கூறுகின்றனர். கோபத்துடன் அந்த இடத்திலிருந்து திரும்பிச் செல்கின்றனர் அமமுக நிர்வாகிகள். பெண்கள் அவர்களை அலறவிட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.