புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் தமிழ்நாடு அரசு வனத்தோட்ட கழகத்தின் மண்டல மேலாளர் அலுவலக வளாகம் அமைந்துள்ளது.
இங்கு இன்று (செப்டம்பர் 18) காலை முதலே லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
அறந்தாங்கி, அரிமளம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலப்பகுதியில் முந்திரி, தைலமரங்கள் நடப்பட்டு தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தின் மேற்பார்வையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
அதில் விளையக்கூடிய முந்திரி, தைல மரங்களை ஆண்டுதோறும் ஏலம் விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின்போது வனத்தோட்ட கழக அலுவலக கண்காணிப்பாளர் வள்ளிக்கண்ணு, வனத்தோட்ட கழக அலுவலர்கள் பலரும் அலுவலக வளாகத்தில் இருந்தனர்.
புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறையினர், இரண்டு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழு தொடர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
வனத்தோட்ட கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
புதுக்கோட்டை: வனத்தோட்ட கழகமண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.