ETV Bharat / state

விரைவில் கரோனா இல்லாத மாவட்டமாக இருக்கும் புதுக்கோட்டை! - புதுக்கோட்டையில் கொரோனா

புதுக்கோட்டை: மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழு பேரில் ஆறு நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

uma
uma
author img

By

Published : May 20, 2020, 1:22 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை கரோனா பாதிப்பானது 11 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஏழு பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் ஏற்கனவே நான்கு பேர் குணமாகி வீடு திரும்பியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், ”தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் அணிந்து, கட்டாயம் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து இலுப்பூருக்கு வந்த நபருக்கும், விராலிமலை தாலுகாவை சேர்ந்த 32 வயதுடைய நபருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டு, புதுக்கோட்டை பழைய அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். இவர்கள் பூரண குணமடைந்ததை அடுத்து இன்றைய தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்கள்.

குணமடைந்து வீடு திரும்பிய இவர்கள் தங்களது வீடுகளில் 7 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுவார்கள். தற்போது மாலத்தீவில் இருந்து குளத்தூருக்கு வந்த 24 வயதுடைய 1 நபர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.