புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் மணல் கடத்தப்படுவதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் வீரமணி உள்ளிட்ட காவல் துறையினர் அன்னவாசலையடுத்த கூத்தினிப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனைசெய்தனர்.
அதில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்பட்டுவந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த டிராக்டரை பறிமுதல்செய்த காவல் துறையினர் சித்தன்னவாசல் பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி, கார்த்திக் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.
இதேபோன்று அன்னவாசல் அருகே உள்ள புதுவயல் குளவாய்கருப்பர் கோயில் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனைசெய்தபோது அதில் மணல் கடத்தப்பட்டுவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து டிராக்டரை பறிமுதல்செய்த காவல் துறையினர், ராப்பூசல் கீழக்களம் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, வடுகப்பட்டியைச் சேர்ந்த ரெங்கசாமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைதுசெய்தனர்.
இதையும் படிங்க... சட்டவிரோதமாக மது விற்ற 4 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்!