ETV Bharat / state

உதவியாளரை தனக்கு காலணி அணிவிக்க செய்த திருநாவுக்கரசர்! - trichy

புதுக்கோட்டை: திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் தனது உதவியாளரை தனக்கு காலணி அணிவிக்க செய்த செயல் சர்ச்சையாகியுள்ளது.

திருநாவுக்கரசர்
author img

By

Published : Jun 13, 2019, 6:28 PM IST

Updated : Jun 13, 2019, 8:12 PM IST

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார். தேர்தல் முடியும் வரை வீதி வீதியாக கிராமம் கிராமமாக அனைத்துக் கட்சியினரும் வெயில் என பாராமல் அனைத்து தரப்பினரிடமும் பரப்புரை செய்தனர். பரப்புரை செய்யும் போதெல்லாம் கூலித் தொழிலாளர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்துவது, உணவு அருந்துவது, அவர்களுக்கு உதவி செய்வது போன்ற பல்வேறு காட்சிகள் அரங்கேறின.

அரசியல்வாதிகள் மக்களிடம் நெருங்க நினைத்தாலும் மக்களிடத்தில் தேர்தலை பற்றிய விழிப்புணர்வும் ஆர்வமும் இல்லாமலே காணப்பட்டது. தற்போது நீட் தேர்வு அறிவிப்பு, கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட், நெடுவாசல் ஹைட்ரோகார்பன், போன்ற அனைத்து பிரச்னைகளும் தமிழ்நாட்டில்தான் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் நேற்று, தற்போதைய திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், தான் தேர்தலில் வெற்றிபெற்றதற்காக புதுக்கோட்டை மாவட்ட மக்களை சந்தித்து நன்றி சொல்வதற்காக வந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலான திருவப்பூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.

அதனையடுத்து மக்களிடம் நன்றி தெரிவித்துவிட்டு கோயிலை விட்டு வெளியே வரும்போது தேங்காய் உடைத்து தரிசனத்தை முடித்தார். அந்த சமயம் அவரிடம் பணிபுரியும் உதவியாளரை தனது காலணியை எடுத்து வருமாறு கூறினார். உதவியாளரும் காலணியை எடுத்து வந்து அவர் அணிவதற்கு ஏதுவாக கீழே வைத்தார். இந்தச் செயல் அருகில் இருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.

உதவியாளரை தனக்கு காலணி அணிவிக்க செய்த திருநாவுக்கரசர்

வரலாற்று சரித்திரம் படைத்த தலைவர்கள் வாழ்ந்து இந்த மண்ணில் தனக்கு நிகரான ஒரு மனிதரை இப்படி ஒரு செயல் செய்ய வைத்திருப்பது மரியாதையற்ற செயலாகவே கருதப்படுகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், "பவர் இருந்தால் பசுமாடும் டவரில் ஏறி நிற்குமாம்" அந்த கதையாக இருக்கிறது இவரது செயல் எனவும் அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தார்கள்.

Intro:பவர் இருந்தா பசு மாடு கூட டவரில் ஏறி நிக்குமாம்....
என்கிற கதையாக இருந்தது திருநாவுக்கரசர் செய்த செயல்..

Body:நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி அடைந்தது. தேர்தல் முடியும் வரை வீதிவீதியாக கிராமம் கிராமமாக அனைத்து கட்சியினரும் வெயில் என பாராமல் ஏழை பணக்காரன் என பாராமல் பிரச்சாரம் செய்து வந்தனர். பிரச்சாரம் செய்யும் போதெல்லாம் கூலித் தொழிலாளர்கள் உடன் சேர்ந்து தேனீர் அருந்துவது, உணவு அருந்துவது,அவர்களுக்கு உதவி செய்வது, போன்ற பல்வேறு படங்கள் வெளியாகின. மக்கள் தங்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் அதிகாரம் கொண்ட ஆட்சியையே பெரிதும் எதிர்பார்த்தனர்.
என்னதான் அரசியல்வாதிகள் மக்களிடம் நெருங்க நினைத்தாலும் மக்களிடத்தில் தேர்தலை பற்றிய விழிப்புணர்வும் ஆர்வமும் இல்லாமலே காணப்பட்டது. இருந்தும் ஒரு வழியாக தேர்தல் முடிந்து ஆட்சியும் வந்துவிட்டது. தற்போது நீட் தேர்வு அறிவிப்பு கூடங்குளம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் போன்ற அனைத்து பிரச்சனைகளும் தமிழகத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணவும் மக்களுக்கு நன்மை செய்வதற்காகவுமே ஒரு தலைவர் நியமிக்க படுகிறார் ஆனால் அந்த தலைவரே சிலசமயம் இழிவாக நடந்து கொள்ளும்போது தான் மக்களிடத்தில் அரசியல்வாதிகளின் மீதான நம்பிக்கை தொலைந்து போகிறது. எந்த ஒரு தலைவரும் உயர்ந்த பதவிக்கு போகும்போது தனக்கு கீழ் உள்ளவர்களை அடிமையாக நடத்த கூடாது. அப்படி நடத்தினால் "அரசியல்வாதிகள் என்றால் பெரிய கொம்பா" என்கிற எண்ணமே மக்களிடம் எழுகிறது. இப்படி ஒரு சம்பவம் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்ந்தது.

நேற்றைய தினம் மாலைப் பொழுதில் தற்போதைய திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தான் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக புதுக்கோட்டை மாவட்ட மக்களை சந்தித்து நன்றி சொல்வதற்காக வந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். அப்பகுதியில் உள்ள மக்களிடம் நன்றி தெரிவித்து விட்டு கோவிலை விட்டு வெளியே வரும் பொழுது தேங்காய் உடைத்து தரிசனத்தை முடித்தார் அந்த சமயம் அவரிடம் பணி புரியும் உதவியாளரை தனது செருப்பை எடுத்து வருமாறு கூறினார். உதவியாளரும் செருப்பை எடுத்து வந்தது மட்டுமில்லாமல் அவரது காலில் அணிவிக்க செய்தார். இந்த செயல் அருகில் இருந்தவர்களிடம் முணுமுணுப்பை ஏற்படுத்தியது. வரலாற்று சரித்திரம் படைத்த தலைவர்கள் வாழ்ந்து மிகவும் எளிமையான வாழ்க்கை நடத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் தனக்கு நிகரான ஒரு மனிதரை இப்படி ஒரு செயல் செய்ய வைத்திருப்பது பெரிய மரியாதையற்ற செயல் எனவும் தெரிகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், " பவர் இருந்தால் பசுமாடும் டவரில் ஏறி நிற்குமாம்" அந்த கதையாக இருக்கிறது இவரது செயல். ஓட்டு கேட்பதற்கு மட்டும் பல்வேறு கெட்டப்புகளில் பணிந்து சென்ற அரசியல்வாதிகள் இப்படி மனிதநேயமற்று நடந்து கொள்வது மிகவும் தவறான ஒன்று.
திருநாவுக்கரசரின் இந்த செயல் அருகில் இருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது மட்டுமின்றி அரசியல் திமிர் எனவும் முணுமுணுக்க வைத்தது.

Conclusion:
Last Updated : Jun 13, 2019, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.