புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டியில் உள்ள அரசு உதவிபெறும் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி மாணவன் தினேஷ்ஹனுமந்த். இவருக்கு சிறு வயதிலிருந்து குத்துச் சண்டையில் அதிக ஆர்வம் இருந்தை கண்ட ஆசியர்கள், பெற்றோர்கள் ஊக்கபடுத்தினர். இதன் விளைவாக தேசிய அளவிலான குத்துச் சண்டைப் போட்டியில் பங்கேற்று மூன்று வெள்ளிப்பதக்கம், ஒரு வெண்கலப்பதக்கம் பெற்றார்.
இந்நிலையில் சர்வதேச அளவிலான மூன்றாவது அமெச்சூர் சதுரங்க குத்துச்சண்டைப் போட்டி ஐரோப்பாவின் துருக்கி நாட்டிலுள்ள அண்டியா என்னும் இடத்தில் நேற்று தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ்ஹனுமந்த் விளையாட தேர்வாகி உள்ளார்.
இந்தியாவின் சார்பாக மொத்தம் 13 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தினேஷ்ஹனுமந்த் 15 வயது முதல் 18 வயதிற்கு இடையேயான ஜீனியர் மாணவர்களுக்கான சதுரங்க குத்துச் சண்டைப் போட்டியில் 46 - 48 கிலோ எடை பிரிவில் விளையாட உள்ளார். சர்வதேச அளவில் நடைபெறும் குத்துச்சண்டைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் நேரில் அழைத்து தினேஷ்ஹனுமந்தை பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...பனிச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு!