1952 முதல் நாடாளுமன்ற தொகுதியாக இயங்கி வந்த புதுக்கோட்டை, கடந்த 2009-இல் தொகுதி மறு சீரமைப்பு என்ற பேரில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி நீக்கப்பட்டது.
புதுக்கோட்டையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளை பிரித்து திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர் ஆகிய மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து வைக்கப்பட்டது.
அதன்படி, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியிலும், திருமயம், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிகள் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலும், விராலிமலை சட்டமன்ற தொகுதி கரூர் மக்களவை தொகுதியிலும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
தனித்து விடப்பட்ட மாவட்டமாக யாரிடம் எதை எதிர்பார்ப்பது என்பதை வெளியில் சொல்ல முடியாமல் இருப்பது தமிழக மக்களில் யாருக்கும் இல்லாத ஒரு வேதனையை புதுகை மாவட்ட மக்கள் சந்தித்து வருகின்றனர்.
எனவே எங்களின் மாவட்டத்துக்கு மீண்டும் எம்.பி தொகுதியை வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் பொதுமக்கள் நோட்டாவிற்கு வாக்களித்து எங்களின் எதிர்ப்பை தெரிவிப்போம் என்றும் அம்மக்கள் கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.