புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம், ஆவுடையார் கோவில் ஒன்றியம், மணமேல்குடி ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று ஈடுபட்டிருந்தார்.
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவர், திருப்புனவாசல் பகுதியில் பரப்பரையில் ஈடுபட்டபின், ஆவுடையார்கோவில் பகுதியை நோக்கி தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, சாலையில் விபத்து ஏற்பட்டு, இருவர் கிடந்துள்ளனர். சாலையோரம் கிடந்த அவர்களை அமைச்சர் விஜய பாஸ்கர் உடனடியாக மீட்டு, அவசர உதவிக்காக தனது ஆதரவாளரின் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், விபத்தில் சிக்கியவர்கள் சடையமங்கலம் அருகேவுள்ள வசந்தனுர் என்ற பகுதியைச் சேர்ந்த அழகுசுந்தரம் (21), விக்ரம் (21) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. செங்கானம் ஊராட்சி மன்றத் தலைவராகப் போட்டியிடும் ராமநாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துவிட்டு இருவரும் வீடு திரும்பும் போது, எதிரே வந்த டாடா ஏஸ் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில், கொட்டும் மழையிலும் மரங்களுக்கு நீர் பாய்ச்சிய நகராட்சி ஊழியர்கள்!