சில நாட்களாக எந்த காரணமும், முன்னறிவிப்பும் இல்லாமல் அலுவலர்களால், இ-சேவை மையத்தில் பணிபுரியும் இளைஞர்கள் நீக்கப்படுகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, பேசிய பாதிக்கப்பட்ட இளைஞர் கூறியதாவது, “இ-சேவை மையத்தில் பணிபுரிவதற்கு என்றே தனி தகுதி தேர்வு எழுதி பயிற்சி பெற்று வந்து பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். கடந்த ஒரு மாதமாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி எங்களை பணியிலிருந்து நீக்குகின்றனர்” என்று தெரிவித்தார்.
மேலும், “தமிழ்நாடு முழுவதும் இதுவரை 46 பேர் பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான காரணமும் இதுவரை தெரிவிக்கவில்லை. இ.எஸ்.ஐ., பி.எஃப். பணம் கொடுக்கவில்லை. மொத்த சம்பளம் வெறும் ரூ.6,000 மட்டும்தான். என்ன செய்வதென்று தெரியாமல் நிக்கிறோம். அதனால் மாவட்ட ஆட்சியர் இதில் கவனம் எடுத்து நடவடிக்கை எடுத்து, பணி கிடைக்குமாறு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க... கஜா புயல் தாக்கி ஓராண்டாகியும் ஆறாத ரணங்கள்! OneYearofGaja