ETV Bharat / state

புதுக்கோட்டையில் தனியார் வங்கியில் பணிபுரிந்த நகை மதிப்பீட்டாளருக்கு கரோனா!

புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானதையடுத்து, வங்கிக்கு சீல் வைக்கப்பட்டது.

author img

By

Published : May 22, 2020, 2:35 PM IST

புதுக்கோட்டையில் தனியார் வங்கியில் பணிபுரிந்த நகை மதிப்பீட்டாளருக்கு கரோனா!
புதுக்கோட்டையில் தனியார் வங்கியில் பணிபுரிந்த நகை மதிப்பீட்டாளருக்கு கரோனா!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 8 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளருக்கும் அவரது மனைவிக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நகராட்சி பணியாளர்கள் வங்கியிலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் நகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வங்கிக்கு சீல் வைத்தார். இதையடுத்து புனேவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய அண்டக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று புதிதாக மூன்று பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: நிவாரணம் வழங்கக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.