மின்சாரம் தாக்கி 3 பேர் படுகாயம்! - மின்சாரம் தாக்கி 3 பேர் படுகாயம்
புதுக்கோட்டை அருகே ஏணி மீது, மின்சாரம் பாய்ந்ததில் கட்டுமானத் தொழிலாளர்கள் இருவர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே உள்ள பாத்தம்பட்டி முக்கம் பகுதியைச் சேர்ந்தவர், கோவிந்தன். இவரது வீட்டில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வீட்டின் இரண்டாவது தளத்தில், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள கோவிந்தன் மற்றும் கூலித் தொழிலாளர்கள் மாயழகு, முருகன் ஆகியோர் அலுமினிய ஏணி மூலம் ஏறியுள்ளனர்.
அப்போது, இரண்டாவது தளத்தையொட்டி சென்ற மின்கம்பி, எதிர்பாராத விதமாக ஏணி மீது உரசியது. இதில் ஏணியில் மின்சாரம் பாய்ந்ததால் கோவிந்தன் உள்ளிட்ட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், காயம் அடைந்த மூவரையும் மீட்டு, சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மூவருக்கும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் நகைக்கடை ஷட்டரை உடைத்து 9 கிலோ தங்கம் கொள்ளை!