ETV Bharat / state

லாட்டரி விற்பனை செய்த 4 பேர் கைது - three number online lottery sales

புதுக்கோட்டை: தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

three number online lottery sales
three number online lottery sales
author img

By

Published : Dec 20, 2020, 10:01 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நகர காவல்நிலைய காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு ராஜ வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில், அரசால் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து லாட்டரி விற்பனை செய்த சுப்பையா, அந்தோனி உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 16, 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: மரக்காணத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.