புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே புதுக்குடியில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 7 பேர் படகு வாங்க பட்டுக்கோட்டைக்கு ஒரு காரில் சென்றனர். பின்னர் அவர்கள் காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியே இராமநாதபுரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
![மணமேல்குடி விபத்து இராமநாதபுரம் கார் விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு Three killed in car crash car crash Three killed in car புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் Pudukottai district news](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-04-accident-death-img-scr-7204435_23012021223045_2301f_1611421245_1032.jpg)
புதுக்குடி அருகே வந்த போது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது. இதில் காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காயமடைந்த 4 பேர் மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் 3 பேரும் தங்கச்சிமடத்தை சேர்ந்தவர்கள், மீன் பிடி தொழில் செய்து வந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மணமேல்குடி காவல் உதவி ஆய்வாளர் பரதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.