புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே உள்ள வெள்ளாளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (35). இவர் வளர்க்கும் கோழிகள் அருகே உள்ள 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லா கிணற்றில் விழுந்ததால் அதனை மீட்க மாரியப்பன் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.
பின்னர் கோழியை மீட்டு விட்டு மாரியப்பன் கிணற்றுக்கு வெளியே வர முயற்சி செய்தபோது வர முடியாமல் மீண்டும் கிணற்றுக்குள்ளேயே விழுந்துள்ளார். இதில் அவருக்கு கழுத்தில் காயமடைந்து கிணற்றிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துள்ளார்.
இதனை அடுத்து அருகே இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கறம்பக்குடி தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி ’ஷேர் நாட்’ என்ற கயிற்றின் மூலம் மாரியப்பனை பத்திரமாக மீட்டு கிணற்றுக்கு வெளியே கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பேருந்தை ஓட்டும்போது நெஞ்சுவலி - இறக்கும் முன் பயணிகளின் உயிரைக் காத்த ஓட்டுநர்