ETV Bharat / state

தென்றலாய் வந்து தீண்டும் அரசுப் பள்ளி மாணவியின் குரல்; வீடியோ வைரல் - பள்ளி மாணவி பாடும் காணொலி

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்று வரும் கலைப் பண்பாட்டுத் திருவிழா மூலம் தனது திறமையை உணர்ந்து பாடல் மற்றும் நடனத்தின் மூலம் கலைத் திறனை வெளிப்படுத்தி வரும் புதுக்கோட்டை மாவட்டம் வயலோகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

தென்றலாய் வந்துத் தீண்டும் அரசுப் பள்ளி மாணவியின் குரல் ; வீடியோ வைரல்

author img

By

Published : Dec 13, 2022, 9:27 PM IST

தென்றலாய் வந்துத் தீண்டும் அரசுப் பள்ளி மாணவியின் குரல் ; வீடியோ வைரல்

புதுக்கோட்டை: வயலோகம் பகுதியைச் சேர்ந்தவர், பழனிச்சாமி. இவர் சமையலராகப் பணிபுரிகிறார். இவரது மனைவி சித்ரா, இவர்களது இளைய மகள் ஆர்த்தி(17). வயலோகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் கணக்கு பாடப்பிரிவை எடுத்து 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.‌

இந்நிலையில், தற்பொழுது ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் மனச்சோர்வை போக்கவும் கலைத்திறனை வளர்க்கும் விதத்திலும் கலைப் பண்பாட்டு திருவிழா நடைபெற்று வரக்கூடிய நிலையில் இந்தக் கலைப் பண்பாட்டு திருவிழா மூலம் ஆர்த்தி தனது திறமையை வெளிக் கொண்டு வந்துள்ளார்.

இந்தக் கலைத் திருவிழாவின் மூலம் நடனம் மற்றும் பாடல் பாடி தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்திய நிலையில் அவர் சிறந்த முறையில் நடனம் ஆடுவதையும் பாடல் பாடுவதையும் அப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் அதற்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து, அந்த வீடியோவை வைரல் ஆக்கியுள்ளனர்.

பின்னர், தனக்கு நடனம் மற்றும் பாடல் நன்றாக வருவதை உணர்ந்த மாணவி ஆர்த்தி, தற்போது நடைபெற்று வரும் கலைப் பண்பாட்டு திருவிழாவில் கலந்து கொண்டு முதல் இரண்டு சுற்றுகளை முடித்து மூன்றாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். மேலும், ஆர்த்தி சிறந்த முறையில் சினிமா பாடல்களையும் அதேபோல் நடனமும் ஆடி பலரையும் வியக்க வைத்து வரக்கூடிய நிலையில் தமிழ்நாடு அரசு மாணவர்களின் மனச்சோர்வை குறைக்க இது போன்ற கலைத் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்றும், மேலும், தன்னிடம் உள்ள பாடல் மற்றும் நடனமாடும் திறமையின் மூலம் பல்வேறு சாதனைகளை வருங்காலங்களில் நிகழ்த்துவேன் எனவும் மாணவி ஆர்த்தி நம்பிக்கை தெரிவித்தார்.

சிறந்த முறையில் நடனம் மற்றும் பாடல்களை பாடிவரும் ஆர்த்திக்கு அப்பள்ளியில் பள்ளியிலும் மாணவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Minister உதயநிதி: விமர்சனத்தை பொருட்படுத்த தேவையில்லை - அமைச்சர் அன்பில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.