ETV Bharat / state

ஏ எப்புட்ரா...! இறந்ததாக கூறிய நபர் உயிர் பிழைத்த அதிசயம்...

பொன்னமராவதி அருகே இறந்ததாக கூறி சடங்கு சம்பிரதாயங்கள் செய்த நபர் திடீரென உயிர் பிழைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிர் பிழைத்த நபரை காண பொதுமக்கள் திரண்டனர்.

சண்முகம்
சண்முகம்
author img

By

Published : Dec 16, 2022, 10:30 PM IST

இறந்ததாக கூறிய நபர் உயிர் பிழைத்த அதிசயம்...

புதுக்கோட்டை: பொன்னமராவதி அடுத்த ஆலம்பட்டி ஊராட்சி முரண்டாம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். விவசாயியான சண்முகம் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

கடந்த 13 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திடீரென உடல் நிலை மோசமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சில் ஏற்றி உள்ளனர். வழியில் சண்முகம் மயக்கமடைந்துள்ளார்.

சண்முகம் இறந்ததாக எண்ணிய உறவினர்கள், அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரும் உடலை, ஊர் எல்லையில் வைக்கோலில் தீவைத்து எரித்து அதன் மீது சடலத்தை கொண்டு வருவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் ஆம்புலன்சில் சண்முகத்தின் உடல் வந்த நிலையில், ஆலம்பட்டி விளக்கு மற்றும் முரண்டாம்பட்டி விளக்கு உள்ளிட்ட மூன்று இடங்களில் வைக்கோல் வைத்து ஊர் மக்கள் எரித்தனர். தொடர்ந்து சண்முகத்தின் உடல் வீட்டிற்கு கொண்டு வந்த நிலையில், அவரது உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சண்முகத்தின் மகன் சுப்பிரமணியன் ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு இருந்த நிலையில், தந்தையின் இறுதிச் சடங்கு காரியங்களை கவனிக்க அதை கழற்றியுள்ளார். மேலும் தன் தந்தைக்கு பால் ஊற்றுவது உள்ளிட்ட காரியங்களையும் செய்துள்ளார்.

இதனிடையே திடீரென சுப்பிரமணியனுக்கு சாமி வந்து, தன் தந்தை பிழைப்பார் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. சில விநாடிகளில் சண்முகமும் கண்விழித்து பார்த்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சல் போட்டனர். தொடர்ந்து உறவினர்களின் பேச்சுக்கு சண்முகம் சைகை மொழியில் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இறந்ததாக கொண்டு வரப்பட்ட சண்முகம் திடீரென உயிர்பிழைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சண்முகத்தின் மனைவி சின்னாத்தா கூறியதாவது, "எனது கணவர் மருத்துவமனையில் சேர்த்து நல்லமுறையில் சிகிச்சைப் பெற்று வந்தார். மருத்துவர்களும் நல்லாத்தான் பார்த்தாங்க ஆனால் திடீரென உடல்நிலை மோசமாகிவிட்டது. இதனால் ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு வீட்டில் கொண்டு வந்து சேர்த்தோம். அப்போ ஒன்னுமே இல்லாமல் இருந்தார். தண்ணீ கொடுத்தோம் கண்ணு முழிச்சிட்டார். அப்பா கண் விழிச்சதும் என் மகன் சுப்பிரமணி திருப்பி ஐய்யப்ப சாமிக்கு மாலை போட்டுட்டார்" என கண்ணீர் மல்க சின்னாத்தா கூறினார்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்த குடும்பம்... மருத்துவமனையில் பாசப் போராட்டம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.