புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சீரமைக்கப்படாததால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் சைக்கள்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மழை காரணமாக சாலையில் உள்ள மேடு பள்ளங்களில் இருக்கும் குழிகளில் விழுந்து விபத்துகுள்ளாகும் நிலையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இனிவரும் மாதம் மழைக்காலம் என்பதால் அறந்தாங்கி நகராட்சி விரைவில் சாலையை சீரமைக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.