ETV Bharat / state

திருமணத்திற்கு சென்ற நபர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு! - pudhukottai latest news

புதுக்கோட்டை: பனையப்பட்டியில் நண்பனின் திருமணத்திற்குச் சென்ற நபர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

pudhukottai
pudhukottai
author img

By

Published : Jan 31, 2020, 11:52 AM IST

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் (40) என்பவர் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூரில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்தில் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து, வீடு திரும்பிய அவர் வழியில் தனது நண்பர்களுடன் பனையப்பட்டி சிவன் கோயில் ஊரணி குளத்தில் குளித்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரின் உடல், அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவரது நண்பர்களால் மீட்கப்பட்டு, திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இது குறித்து பனையப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: குளத்தில் மூழ்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

Intro:Body:
திருமயம் அருகே நண்பனின் திருமணத்திற்கு வந்த நபர் குளத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக மணமகனின் நண்பரான சேலத்தை சேர்ந்த சீனிவாசன் (40) தனது நண்பர்கள் 6 பேருடன் வந்திருந்தார். இந்நிலையில் காலை நண்பனின் திருமணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது பனையப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள கடையில் டீ குடித்துள்ளனர். அப்போது அருகே உள்ள சிவன் கோயில் ஊரணியில் நீர் இருப்பதை கண்டு அனைவரும் குளிக்க முடிவுசெய்து ஒன்றாக குளத்தில் இறங்கி குளித்துள்ளனர். இந்நிலையில் சீனிவாசன் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக குளித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இதனால் நிலைதடுமாறிய சீனிவாசன் குளத்து நீரில் மூழ்கி தத்தளித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த நண்பர்கள் மற்றும் அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் நீரில் தத்தளித்த சீனிவாசனை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் சீனிவாசன் நீரில் மூழ்கியதால் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நண்பர்கள் அவரின் இறந்த உடலை மட்டுமே மீட்க முடிந்தது. இதனைத்தொடர்ந்து சீனிவாசன் உடல் திருமயம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பனையப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.