புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் விராலிமலைத் தொகுதிக்குள்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
அப்போது கன்ட்ரோல் யூனிட்டில் சீரியல் நம்பர் இல்லாததால் அனைத்துக் கட்சிகளின் முகவர்கள், தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தற்போது வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்: அதிமுக அமைச்சர்கள் பின்னடைவு