கரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருடந்தோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா பல்வேறு இடங்களில் பக்தர்களின்றி நடைபெற்றது.
அதைப் போல, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மூக்குடி கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ பொற்குடையார் திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவும் விமரிசையாக நடைபெறவில்லை. அறந்தாங்கி, கூத்தாடிவயல், மூக்குடி, அழியாநிலை சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளிலுள்ள மக்களுக்கு இது பெரும் ஏமாற்றம்மளித்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கோயிலுக்கு அறந்தாங்கியிலிருந்து செல்லும் பாதைகளான மூக்குடியிலிருந்து வரும் பாதை, கோட்டை பகுதியிலிருந்து வரும் பாதை, அரசு மருத்துவமனை வழியாகச் செல்லும் பாதைகளில் அறந்தாங்கி காவல் துறையினர் தடுப்புவேலி அமைத்துக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அதனையும் மீறி கோயில் வளாகப்பகுதிக்குள் வரும் நபர்களை விசாரணை செய்து, எச்சரித்து திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லி மாநாட்டில் பங்கேற்று புதுக்கோட்டை திரும்பிய 15 பேரில் 10 பேருக்கு கரோனா இல்லை!