புதுக்கோட்டை : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது சமீபகாலமாக தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் சண்முகநாதன் என்பவர் அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு தொலைபேசி மூலம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் சண்முகநாதன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இன்று காலை அவர் தனக்கு நெஞ்சுவலி என்று கூறியதைத் தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை திருமயம் கிளைச் சிறையில் அடைக்க நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : போலீஸாருக்கு வார விடுமுறை - அரசாணை வெளியீடு