ETV Bharat / state

புதுக்கோட்டை அருகே ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது - புதுக்கோட்டை நில அளவையர்

புதுக்கோட்டையில் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நில அளவையர் கைது
நில அளவையர் கைது
author img

By

Published : Apr 23, 2021, 7:57 AM IST

புதுக்கோட்டை: பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா சிதம்பரம் (54). இவர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள விராலூர் பகுதியில் 12 வீட்டு மனைகளை வாங்கியுள்ளார். இந்த வீட்டு மனைகளை தன் பெயருக்கு உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய விராலிமலை தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரியும் புதுக்கோட்டை காமராஜபுரத்தைச் சேர்ந்த தங்கதுரை (36) என்பவரை அனுகியுள்ளார்.

அப்போது, ரூ.10 ஆயிரம் கொடுத்தால் உட்பிரிவு செய்து பட்டாவை மாற்ற உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாகவும், மேலும் இந்தப் பணத்தை தங்கவேல் என்பவரிடம் கொடுக்குமாறு நில அளவையர்‌ கூறியுள்ளார்.

தொடர்ந்து பணம் தர மணமில்லாமல் ராஜா சிதம்பரம் புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையிடம் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில், காவலர்கள் ஆலோசனையின்படி நேற்று (ஏப். 21) மதியம் ரூ. 10 ஆயிரத்துடன் விராலிமலை தாலுகா அலுவலகம் அருகே உள்ள ஒரு மளிகை கடை முன்பு வைத்து தங்கவேலுவிடம் ரூ. 10 ஆயிரத்தை ராஜாசிதம்பரம் கொடுத்துள்ளார். உடனடியாக அந்தப் பணத்தை தங்கவேல் நில அளவையர் தங்கதுரையிடம் கொடுத்துள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையிலான காவலர்கள் தங்கதுரையை கையும் களவுமாக பிடித்து கைதுசெய்தனர். மேலும், இச்சம்பவத்தில் வேறு அலுவலர்கள் யாருக்கும் தொடர்பிருக்கிறதா என நில அளவையரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.