புதுக்கோட்டை கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் திருவப்பூர் பகுதியில் நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது முத்து மாரியம்மன் கோயில் அருகே உள்ள கடை வீதியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், சுரேஷ் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபல ரவுடியாக கருதப்பட்ட சுரேஷ் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என திருக்கோகர்ணம் காவல்துறையினர் கூறுகின்றனர்.