புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து திருச்சி நோக்கி காரில் ஹைதராபாத்தைச் செர்ந்த ஐந்து பேர் சென்றுள்ளனர். அப்போது எதிரே திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த சரக்கு வாகனம், சிப்காட் அருகே எதிரெதிரே வந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதாகக் கூறப்படுகிறது.
![விபத்திற்கு காரணமாக இருந்த சரக்கு வாகனம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-01-accident-news-scr-image-7204435_15122019190351_1512f_1576416831_863.jpg)
மேலும் அவ்வழியாக வந்த மற்றொரு காரும் விபத்துக்குள்ளான கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஜேஷ், லெக்ஷ்மா, நரயனமா, ரமேஷ், யடாலெட்சுமி, ஆகிய 5 பேர் உள்பட புதுக்கோட்டை அய்யனாபுரத்தைச் சேர்ந்த முகமது ரபிக் (23), கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா (39), மற்றும் 3 பேர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
![அடுத்தடுத்து மோதிய கார்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-01-accident-news-scr-image-7204435_15122019190351_1512f_1576416831_652.jpg)
இதனையடுத்து விபத்தில் சிக்கிய 10 பேரும் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்