ETV Bharat / state

விவசாயத்திற்கு உதவும் செயற்கைக்கோள்; சாதனை படைத்த மாணவிகள்!

புதுக்கோட்டை: பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே கணித்து, விவசாயத்திற்கு உதவும் வகையில் சிறிய ரக செயற்கைக்கோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் 12 ஆம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவிகள்.

satellite
satellite
author img

By

Published : Feb 20, 2020, 9:28 PM IST

Updated : Feb 22, 2020, 2:10 AM IST

அறந்தாங்கியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் சுபானா, கீர்த்தனா ஆகியோர் 400 கிராம் எடையுள்ள நானோ செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர். பருவநிலை மாற்றங்களைக் கண்டுபிடிக்கவும், வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்சைடு, காற்றின் ஈரப்பதம், காற்றின் நச்சுத்தன்மை ஆகியவற்றை அளவிடவும் இச்செயற்கைக்கோள் உதவும் என்றும், அதன்மூலம் விவசாயத்திற்குத் தேவையான பயன்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மாணவிகள் கூறுகின்றனர்.

இந்தச் செயற்கைக்கோள் மூலம், விவசாய நிலங்களை ஆராய்ந்து பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே கணித்து, எந்த நிலத்தில் என்ன மாதிரியான பயிர் செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். விவசாயத்திற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பணியைத் தொடங்கியதாகக் கூறும் இந்த மாணவிகள், அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளை நிச்சயம் உருவாக்குவோம் என நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

காலநிலையை முன்கூட்டியே அறியும் செயற்கைக்கோள் - சிறப்பு தொகுப்பு

மெக்சிகோவில் உள்ள ஏர்பேஸ்லா ஹீலியம் கேப்சூல் (Airbasela helium capsule) மூலம் இந்தச் செயற்கைக்கோள் விரைவில் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சாதனை மாணவிகளை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, ஆசிரியர்களும் புதுக்கோட்டை மண்ணின் இளம் அறிவியலாளர்களுக்கு வாழ்த்து கூறினர்.

இதையும் படிங்க: "மனம் விட்டுப் பேசும் வகுப்'பறை' அமைப்போம்" - தெருக்கூத்தாய் வெடித்த மதுரை மாணவியரின் கலகக் குரல்

Last Updated : Feb 22, 2020, 2:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.