புதுக்கோட்டை மாவட்டம் கொப்பனாப்பட்டி அருகேவுள்ள தச்சம்பட்டி காட்டுப்பகுதி வழியாக அப்பகுதி மக்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது, பச்சிளம் குழந்தை ஒன்று அழுகிய நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக பொன்னமராவதி காவல் நிலையத்திற்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர், அழுகிய நிலையில் கிடந்த பெண் குழந்தையை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், குழந்தை பிறந்து ஒரு வாரத்திற்குள் இருக்கும் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த குழந்தை யாருடையது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிறந்த ஒரு மணி நேரத்தில் வீதியில் வீசப்பட்ட பெண் குழந்தை; வேலூரில் கொடூரம்