புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே வடுகப்பட்டியில், சொத்து பிரச்னையில் மாமனார் சைவராஜை, அவரது மருமகனான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரவிச்சந்திரன் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சைவராஜ் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
கடந்த இரண்டு மாதங்களாக கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்த நிலையில், நேற்று (நவ.25) இரவு சைவராஜ் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்ததாகவும், ரவிச்சந்திரனிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி வைக்குமாறு காவலர்களிடம் கூறியதாகவும், சைவராஜ் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் விட்டதால் தான் இந்த படுகொலை நடந்தாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: துப்பாக்கியுடன் போட்டோவுக்கு போஸ்: 10 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு...