தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது புதுக்கோட்டை மாவட்டத்தில் தான், அதேபோல் அதிக அளவில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பும் புதுக்கோட்டை மாவட்டத்திலியே உள்ளது. ஜல்லிக்கட்டு காளையை நினைவு கூறும் விதமாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சிலை கூட வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சண்டை சேவல் வளர்போர் அதிகளவில் உள்ளனர். மன்னர்கள் காலத்திலிருந்தே சேவல் சண்டை போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று பரிசுகள் வழங்கி வந்த நிலையில் , காலப்போக்கில் சண்டை சேவல்கள் துன்புறுத்தப்படுகின்றன, கால்களில் கத்தி கட்டப்படுகிறது, என்று குற்றம் சாட்டி சேவல் சண்டைக்கு தடை விதித்திருந்தனர்.
அதனால் சேவல் வளர்ப்போர் பெரும் துயரம் அடைந்துள்ளனர் என்று சேவல் வளர்ப்போர் தெரிவித்தனர். புதுக்கோட்டையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்த 40க்கும் மேற்பட்ட சண்டை சேவல் வளர்ப்போர் , பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கண்டிப்பாக சேவல் சண்டை போட்டிகளை நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சண்டை சேவலுடன் வந்து மனு அளித்து கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: