புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசினார். அப்போது, "புதிய நாடாளுமன்றம் கட்டுவதால் எவ்வித பயனும் கிடையாது.
தற்போது, ஊடரங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை முடக்கவே இந்த 144 தடை உத்தரவு பயன்படுத்தப்படுகிறது. உடனடியாகத் தமிழ்நாடு அரசு 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும்.
திமுக கூட்டணியில் குழப்பம் வர வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் கிடையாது. கூட்டணியில் உள்ள கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதால் எந்தப் பாதிப்பும் கிடையாது.
திமுக கூட்டணி சார்பில் அனைவரிடமும் ஆதரவு கேட்கப்படும். அதேபோன்று ரஜினிகாந்திடமும் ஆதரவு கேட்கப்படும், அவர் எங்களுக்கு ஆதரவு அளிக்கக்கூட வாய்ப்புள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும். 1996ஆம் ஆண்டு தேர்தலில் ரஜினிகாந்த் குரல் கொடுத்ததால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஜெயலலிதாவின் எதிர்ப்பு அலைதான் 1996இல் மாற்றம் வருவதற்கு காரணம்" என்றார்.
இதையும் படிங்க: 'இடதுசாரி சித்தாந்தமே சரியானது'- ஆர்யா ராஜேந்திரன் சிறப்பு பேட்டி