புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பெருமாநாடு குளக்கரை முட்புதரில் சரசரவென சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து குளக்கரையிலிருந்த இளைஞர்கள் சிலர், முட்புதரில் என்னவென்று பார்த்தபோது முட்புதரில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நகரமுடியாமல் இருந்துள்ளது.
இதனைக் கண்ட இளைஞர்கள், அந்த மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் மலைப்பாம்பு யாருக்கும் பிடிகொடுக்காமல் போக்கு காட்டியது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் இளைஞர்கள் அந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினருக்கு தகவலளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம் இளைஞர்கள் மலைப்பாம்பை ஒப்படைத்தனர்.
தொடர்ந்து வனத்துறையினர் மலைப்பாம்பை நார்த்தாமலை காப்புக்காட்டில் பத்திரமாகவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: செம்மறி ஆட்டை சுற்றிவளைத்த மலைப்பாம்பை வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர்