ETV Bharat / state

வாக்குப் பெட்டியை திருடிச்சென்று முட்புதரில் போட்டுவிட்டு உறங்கிய நபர் கைது!

author img

By

Published : Dec 28, 2019, 8:51 AM IST

புதுக்கோட்டை: பெரியமூளிப்பட்டி அருகே மதுபோதையில் இருந்த ஒருவர் வாக்குப் பெட்டியைக் கடத்தி கொண்டு, அதனை முட்புதரில் வைத்து தூங்கிக் கொண்டிருக்கும்போது காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

வாக்குப் பெட்டியை திருடிச்சென்று முட்புதரில் போட்டுவிட்டு உறங்கிய நபர் கைது!
pudukottai-police-arrested-a-drunken-man-who-thefts-ballot-box-from-polling-booth

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று முதல்கட்டமாக தமிழ் நாடு முழுவதும் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, குன்னாண்டார் கோயில், விராலிமலை உள்ளிட்ட ஆறு பகுதிகளில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டையில் மாலை 4 மணிவரை 71% வாக்குப்பதிவாகி உள்ளது. விராலிமலையில் உள்ள நீர்பழனி அருகே பெரியமூளிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை அடுத்து வாக்குப் பெட்டியை சீல் வைத்து அலுவலர்கள் எடுத்து செல்ல முற்படும்போது, மதுபோதையில் இருந்த மூர்த்தி என்பவர் பெட்டியை அங்கிருந்து தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து கீரனூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் வந்து விசாரணை நடத்தினார்.

மூர்த்தி என்பவர் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக வாக்குப் பெட்டியை மதுபோதையில் தூக்கி சென்று அரை கிலோ மீட்டர் தூரத்தில் பெட்டியை முள்புதரில் போட்டுவிட்டு அதன் அருகிலேயே படுத்து தூங்கி உள்ளார்.

இதனால் அப்பகுதியில் சோதனை செய்த காவல்துறையினர் அவரை பிடித்து அவரிடமிருந்து கைப்பற்றிய வாக்குப் பெட்டியையு மீண்டும் பள்ளியில் கொண்டு வந்து வைத்தனர். அதன் பின் வாக்கு எண்ணும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதையடுத்து மூர்த்தியை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்குப் பெட்டி திருடி செல்லப்பட்டதால் பெரியமூளிப்பட்டி வாக்கு மையத்தில் பரபரப்பு

இதையும் படியுங்க: தேர்தல் பறக்கும் படைகள் சுற்றிப்பிடித்த பொருட்களின் விவரம்!

Intro:Body:ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி குன்னாண்டார் கோயில் விராலிமலை உள்ளிட்ட 6 பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது மாலை 4 மணிவரை 71% வாக்குப்பதிவு நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை யில் உள்ள நீர்பழனி அருகே பெரியமூளிப்பட்டியில், உள்ள அரசு பள்ளியில் மாலை 5 மணியுடன் வாக்கு பதிவு நிறைவு பெற்றதை அடுத்து வாடிப்பட்டியில் சீல் வைக்கப்பட்டு அதிகாரிகள் இருந்து வந்த நிலையில் மதுபோதையில் இருந்த மூர்த்தி என்பவர் பெட்டியை அங்கிருந்து தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கீரனூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் வந்து விசாரணை நடத்தியதில் வாக்குப்படியே தூக்கிச்சென்ற மூர்த்தி என்பவர் மது போதையில் இருந்ததால் திடீரென ஒரு தரப்பினருக்கு ஆதரவாக வாக்கு பெட்டியை அங்கிருந்து தூக்கி சென்று அரை கிலோ மீட்டர் தள்ளி பெட்டியை முள் புதரில் போட்டுவிட்டு அதன் அருகிலேயே படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார் போலீசார் அவரை பிடித்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாக்கை பெட்டியையும் மீண்டும் பள்ளியில் கொண்டு வந்து வைத்து பேக்கிங் செய்து வாக்கு என்னும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.