ETV Bharat / state

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்.11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, வரும் 11ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை
author img

By

Published : Apr 9, 2022, 7:15 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை கிராமத்தில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா நாளை மறுநாள் (11.04.2022) நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு, அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக, வரும் 23-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்றும், சனிக்கிழமைகளை வேலை நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு, வரும் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும், அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டு குறைந்தபட்ச அலுவலர்களுடன் திறந்திருக்கும் எனவும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிகரித்து வரும் மோசடி: பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.