புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவர் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலிருந்து வெளியே வரும்பொழுது அங்கு திரளாக நின்ற திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பிலிருந்த காவல் துறையினர் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இறுதியில் காவல் துறையினர் திமுகவை சேர்ந்த அனைவரையும் ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தாமதமாக வந்த தேர்தல் அலுவலர் - தள்ளிப்போன மறைமுகத் தேர்தல்!