ETV Bharat / state

பாடலுக்கு ஆடி அசத்திய அரசுப் பள்ளி ஆசிரியை - ஷேர் செய்த கலெக்டர் கவிதா ராமு

அரசு பள்ளி ஆசிரியரின் நடன பயிற்சியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஐஏஎஸ் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 3, 2023, 10:57 PM IST

Updated : Feb 3, 2023, 11:04 PM IST

பாடலுக்கு ஆடி அசத்திய அரசுப் பள்ளி ஆசிரியை - ஷேர் செய்த கலெக்டர் கவிதா ராமு

புதுக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர் ஒருவர் தமது பள்ளி மாணவிகளை உற்சாகப்படுத்துவதற்காக பாடல் ஒன்றிற்கு மாணவிகளோடு இணைந்து நடனமாடிய காட்சியை மாவட்ட ஆட்சியர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி காண்போரை கவர்ந்து வருகிறது.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ராஜகோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றுபவர், ரேவதி. இந்நிலையில் நடந்து முடிந்த பள்ளிகளுக்கு இடையேயான கலைத் திருவிழாவின்போது அந்த பள்ளியில் பயிலும் மாணவிகளும் கலைத் திருவிழாவில் பங்கேற்க நடனப்பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டு இருந்துள்ளார்.

அப்போது அப்பள்ளி மாணவிகளை உற்சாகப்படுத்தும் நோக்குடன் பாடல் ஒன்றுக்கு அப்பள்ளியின் தமிழ் ஆசிரியை ரேவதி நடனமாடிய காட்சிகளும், அவருடன் சேர்ந்து அப்பள்ளி மாணவிகளும் நடனமாடிய காட்சிகளும் காண்போரின் கவனத்தை ஈர்த்தது. கலைத் திருவிழாவில் பங்கேற்க சென்ற அரசுப் பள்ளி மாணவிகளை உற்சாகப்படுத்துவதற்காக ஆசிரியர் ரேவதி நடனமாடிய வீடியோவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று (பிப்.3) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், 'எங்கள் அரசுப் பள்ளி ஆசிரியை ரேவதியின் ஒரு அழகான நிகழ்ச்சி என்றும், அவர் தன் குழந்தைகளுடன் நடனமாடும் ஆசையை அண்மையில் நடந்து முடிந்த கலைத் திருவிழா ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றும், நடனம் வாழ்வை அழகாக்கும்' என்றும் ஆட்சியர் பதிவிட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளை உற்சாகப்படுத்தும் நோக்குடன் அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பாடல் ஒன்றுக்கு அற்புதமாக நடனமாடிய காட்சியும் அதனை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட காட்சியும் காண்போரைக் கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க: தருமபுரியில் குளோரின் அதிகமான குடிநீர்; தொண்டை பாதிப்புகளால் பொதுமக்கள் அவதி!

Last Updated : Feb 3, 2023, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.