தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் மக்களவை பொதுத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இது குறித்து மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி பேட்டியளித்ததாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது வரை எந்த இடையூறுமின்றி தேர்தல் நல்ல முறையில் நடந்து வருகிறது. 11 மணி நிலவரப்படி, இதுவரை ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 264 வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு முன்னால் இயந்திரங்கள் பழுதாகி இருக்கிறது என தகவலறிந்து 22 இயந்திரங்களை மாற்றியுள்ளோம். பகுதியில் உள்ள தீயத்தூர் என்னும் இடத்தில் மட்டும் வாக்குப்பதிவின்போது பழுதடைந்த வாக்கு இயந்திரத்தை தற்போது மாற்றி அமைத்து அங்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக 600 காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் டெல்லியில் இருக்கும் தேர்தல் ஆணையம் வெப் கேமரா மூலம் கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.