ETV Bharat / state

புதுக்கோட்டையில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா

புதுக்கோட்டை: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் இன்று நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா தொடங்குகிறது. இதுகுறித்து பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

pudukottai book fare awareness
புத்தகத் திருவிழா விழிப்புணர்வு பேரணி
author img

By

Published : Feb 14, 2020, 8:31 AM IST

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வருடந்தோறும் புத்தகத் திருவிழா நகரமன்ற அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா நேற்று புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் தொடங்குகிறது.

இந்தப் புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்வேறு வகையில் உள்ள புத்தக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 25ஆம் தேதி வரை இந்த புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வைப் பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள், பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் புத்தகத் திருவிழா நிகழ்ச்சி பற்றிய விழிப்புணர்வை மாவட்டத்தின் நகரப்பகுதிகளில் ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புத்தகத் திருவிழா விழிப்புணர்வு பேரணி

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் மலர்க் கொத்துகள், கடலை மிட்டாய் ஆகியவை கொடுத்து இருசக்கர வாகன பேரணியில் கலந்துகொண்டவர்களை வரவேற்றனர்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கிலம் கற்க 'புதுமை பாடசாலை' கண்காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.