புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் பகுதியைச் சேர்ந்த காஜா அலாவுதீன் என்பவரின் மகன் முபாரக் (17). சென்னையில் பணிபுரிந்து வந்த இவர், கரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக தனது சொந்த ஊரான அறந்தாங்கிக்கு வந்துள்ளார்.
அங்கு இருசக்கர வாகனத்தில் சென்றவர், தனக்கு முன்னால் வேகமாகச் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடலை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வேளாங்கண்ணி அருகே டிராக்டர் மோதி விபத்து: மூதாட்டி உயிரிழப்பு