புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் மூர்த்தி. அதே பகுதியைச் சேர்ந்த வீராசாமி மற்றும் அவரது மகன் ஆகியோருடன் மூர்த்திக்கு பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் முன் விரோதம் இருந்துள்ளது.
இதற்கிடையே கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வீராசாமி, முத்து ஆகிய இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக மூர்த்தி அவரது நண்பர்கள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிறையில் இருந்து தற்போது வெளியே வந்த மூர்த்தியினை, அடையாள தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மூர்த்தியின் உடலினை மீட்டு உடற் கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க :22 நாள்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட மின் தொழிலாளி - சந்தேகிக்கும் உறவினர்கள்