புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில் பஜார் மெயின் ரோட்டில் அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மருந்துக்கடை ஒன்றில் அதன் உரிமையாளர், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்துள்ளனர்.
இதையடுத்து, முகக் கவசம் அணியாமல் இருந்து, வணிக நிறுவனத்தின் முன் கை கழுவும் முறையின் அமைப்பை ஏற்படுத்தப்படாமல் இருந்ததால் வட்டாட்சியர் திருநாவுக்கரசு, பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி ஆகியோர் முன்னிலையில் கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மேலும், பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் கடை பணியாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவித்த நடைமுறைகளை பின்பற்றி கரோனா பரவலை தடுக்க போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வணிக நிறுவனங்களுக்கு அரசு அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.