ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வனவிலங்குகளுக்கு எந்தவித ஒரு பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருந்தது.
இருந்தபோதும் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட காத்தான் விடுதியைச் சேர்ந்த பிரபு, ரமேஷ், சூரி ஆகிய மூவரும் தைல மரத்தோப்பில் இரண்டு உடும்புகளைப் பிடித்து, அதனை டிக் டாக்கில் வெளியிட்டுள்ளனர். பிறகு அதைக் கொன்று சாப்பிட்டதாகவும் தெரிகிறது.
![கைது செய்யப்பட்ட இளைஞர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-01-karambakudi-tiktok-issue-arrest-visual-scr-7204435_07052020170129_0705f_1588851089_102.jpg)
இது குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை வனத்துறை அலுவலர்கள் டிக்டாக்கில் காணொலி வெளியிட்டது யார் என்பதைக் கண்டுபிடித்து மூவரையும் கைது செய்துள்ளனர்.
வன விலங்குகளையும் பறவைகளையும் பிடித்து டிக் டாக்கில் விளையாடுவது வழக்கமாகி வரும் நிலையில், வனத்துறை அலுவலர்கள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க...விபத்து ஏற்பட்ட விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலை யாருடையது?