புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரீப், அய்யாதர் மவழி பேரவை பாலமுருகன், விடுதலை தமிழ் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றமாட்டோம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக உள்ள திட்டத்தை ரத்து செய்யவேண்டும்.
தென் மாவட்டங்களை தமிழ்நாட்டின் பாதுகாக்ப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றவேண்டும்’ என்றார். மேலும் தமிழ்நாடு அரசு இப்பகுதி விவசாயிகளை காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு சட்ட ரீதியான விஷயங்களை செய்வதற்கு அரசு முன்வர வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த பேரணியில் 2500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதிய பரப்புரையை தொடங்கவுள்ள நிதியமைச்சகம்!