ETV Bharat / state

'என்னப் பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊறுகிறதா' - ருசியைத் தூண்டும் புதுக்கோட்டை முட்டை மாஸ்! - Pudukkottai's Special Egg Mass has been around for 50 years

புதுக்கோட்டை: 50 வருடங்களாக புதுக்கோட்டை மக்களின் ஃபேவைரட்டாக முட்டை மாஸ் திகழ்ந்து வருகிறது. அவ்வாறு பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறவைக்கும் முட்டை மாஸ் பற்றி தான் இந்த சிறப்புத் தொகுப்பு!

புதுக்கோட்டையின் சுவையான முட்டை மாஸ்
author img

By

Published : Nov 7, 2019, 10:50 PM IST

Updated : Nov 8, 2019, 1:05 AM IST

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அதாவது திருநெல்வேலி அல்வா, மதுரை மல்லிப்பூ, திண்டுக்கல் பூட்டு, சேலம் மாம்பழம், திருப்பதி லட்டு எனச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு ருசியான சிறப்பு சேர்ந்துள்ளது. அப்படி ஒரு சுவையான உணவு தான், முட்டை மாஸ்.

முட்டை மாஸில் என்னப்பா அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு கேப்பீங்க... ஆனால், அதற்கு தனி வரலாற்றுக் கதையே உண்டு. புதுக்கோட்டை ஹோட்டலில் 50 வருடங்களுக்கு முன் முத்துப்பிள்ளை என்பவர், சாப்பிடுவதற்காக சைடிஷ் இல்லை என்று ஒரு முட்டையையும் இருந்த குழம்பையும் சேர்த்துச் செய்து சாப்பிட்டுள்ளார். அதையே வாடிக்கையாளர்களுக்கு செய்தும் கொடுத்துள்ளார். இது ஒருவருக்கு ஒருவர் பிடிக்கத் தொடங்கி, 50 ஆண்டுகளாக இதுவே புதுக்கோட்டையின் சிறப்பாகத் திகழ்கிறது. இதைச் சாப்பிடும் வாடிக்கையாளர்கள் புதுக்கோட்டையிலிருக்கும் முட்டை மாஸைப் போன்று, வேறு எந்த மாவட்டத்திலும் கிடைப்பதில்லை என்று தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை முட்டை மாஸுக்குப் பிரபலமான உணவகத்தின் உரிமையாளர் கூறுகையில்," 50 வருடங்களுக்கு முன்பு, என் அப்பாவின் அப்பா இதனை முதலில் தொடங்கினார். அதன் பின் இப்போது வரை முட்டை மாஸ் செய்து விற்பனை செய்து வருகிறோம். கூகுளில் தேடினால் கூட முட்டை மாஸ் என்றால் புதுக்கோட்டையும் முத்துப்பிள்ளை கேண்டீனும் தான் வரும்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். முட்டை மாஸை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் தினம்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மற்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் கூட இந்த முட்டை மாஸை சுவைக்காமல் செல்வதில்லை.

புதுக்கோட்டையின் சுவையான முட்டை மாஸ்

புதுக்கோட்டையில் நிறையக் கடைகளில் முட்டை மாஸ் கிடைக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் புதுக்கோட்டையின் சிறப்பாகவே முட்டை மாஸ் மாறிவிட்டது. முட்டை மாஸில் நான்கு வகையாகக் கொடுப்பது தான் அதன் தனிச் சிறப்பு. இதற்காகவே சில வாடிக்கையாளர்கள் எங்கள் உணவகத்துக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். எங்கள் உணவகத்தின் மற்றொரு சிறப்பு முட்டை லாப்பா என்று அழைக்கப்படும் பரோட்டா தான். இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசையாக ருசித்துச் சாப்பிட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெகிழச் செய்யும் மனிதநேயம்! - உதவிக்கரம் நீட்டும் சாமானியர்கள்!

Intro:Body:இது புதுக்கோட்டையின் ஸ்பெஷல்....

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அதாவது திருநெல்வேலி என்றால் நினைவுக்கு வருவது அல்வா, மதுரை என்றால் நினைவுக்கு வருவது மல்லிப்பூ, திண்டுக்கல் என்றால் நினைவுக்கு வருவது பூட்டு,சேலம் என்றால் நினைவுக்கு வருவது மாம்பழம், திருப்பதி என்றால் நினைவுக்கு வருவது லட்டு. அப்படி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு ருசியான சிறப்பு உண்டு. அப்படி ஒரு சுவையான உணவைப் பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

எந்த ஒரு மாவட்டத்திலும் கிடைக்காத வகையில் முட்டையால் செய்யப்படும் ஒரு சைடிஸ் முட்டை மாஸ். முதன்முதலில் புதுக்கோட்டையில் 50 வருடங்களுக்கு முன்னால் முத்துப்பிள்ளை என்பவர் நடத்திய ஹோட்டலில், தான் சாப்பிடுவதற்காக சைடிஸ் இல்லை என்று ஒரு முட்டையையும் இருந்த குழம்பையும் சேர்த்து செய்து சாப்பிட்டாராம் அது ஒருவருக்கு ஒருவர் பிடிக்கத் தொடங்கி 50 ஆண்டுகளாக இன்று வரை புதுக்கோட்டையின் சிறப்பாகத் திகழ்கிறது. வேறு எந்தவொரு மாவட்டத்திலும் புதுக்கோட்டையில் இருக்கும் முட்டை மாஸைப் போன்று கிடைப்பதில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது உள்ள அந்த கடையின் உரிமையாளர் கூறியபோது 50 வருடங்களுக்கு முன்னால் என் அப்பாவின் அப்பா இதனை முதலில் தொடங்கினார் அதன் பின் இப்போது வரை முட்டை மாஸ் செய்து விற்பனை செய்கிறோம் என்று கூறினார். மேலும் கூகுளில் தேடினால் கூட முட்டை மாஸ் என்றால் புதுக்கோட்டையும் முத்துப்பிள்ளை கேண்ட்டீனும் தான் வரும் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். முட்டை மாஸை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் தினம்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.மற்ற மாவட்டங்களிலும் ஊர்களிலும் இருந்து வருபவர்கள் கூட இந்த முட்டை மாஸை சுவைக்காமல் செல்வதில்லை. புதுக்கோட்டையில் நிறைய கடைகளில் முட்டை மாஸ் கிடைக்கிறது ஏனென்றால் தற்போது புதுக்கோட்டையின் சிறப்பாகவே முட்டை மாஸ் மாறிவிட்டது. முட்டை மாஸில் உள்ள வகைகள் நான்கு வகையாக கொடுக்கிறோம் இதனால் சில வாடிக்கையாளர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். என்று அந்த கடையின் உரிமையாளர் கூறினார். முட்டைலாப்பா என்று அழைக்கப்படும் இந்த வகையான பரோட்டா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து வருகின்றனர் முட்டை மாஸ் மற்றும் முட்டைலாப்பா மேலும் ஒரு ஸ்பெஷலாக இருக்கிறது. வேறு ஊர்களில் இருந்து வரும் நபர்கள் இந்த உணவை தேடிவந்து விரும்பி ருசித்து செல்கின்றனர்.

என்ன பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊறுகிறதா??
புதுக்கோட்டையின் சுவையான இந்த முட்டை மாஸை எப்போது இங்கு வந்தாலும் சுவைக்க மறக்காதீர்கள்....

Eடிவி பாரத் செய்திகளுக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சங்கவி. Conclusion:
Last Updated : Nov 8, 2019, 1:05 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.