ETV Bharat / state

மாணவிகள் உடற்கூராய்வு அறிக்கை எங்கே? - கொந்தளித்த பெற்றோரின் காலில் விழுந்த ஆசிரியை! - Pudukkottai district news

புதுக்கோட்டை மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது மாணவிகளின் உடற்கூராய்வு அறிக்கையை ஒப்படைக்க வேண்டும் என உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடற்கூராய்வு அறிக்கை எங்கே? - கொந்தளித்த பெற்றோரின் காலில் விழுந்த ஆசிரியை!

author img

By

Published : Feb 20, 2023, 12:29 PM IST

மாணவிகளின் உடற்கூராய்வு அறிக்கையை ஒப்படைக்க வேண்டும் என உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் வாக்குவாதம்

புதுக்கோட்டை: விராலிமலை அருகே உள்ள பிலிப்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் 2 ஆசிரியர்கள் உள்பட 15 பேர், கடந்த பிப்ரவரி 15 அன்று தொட்டியத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளச் சென்றனர். பின்னர் அங்கிருந்து திரும்பும் வழியில் கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக 4 மாணவிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பள்ளிக்குத் தொடர்ந்து 4 நாட்கள் (பிப்.16, 17, 18 மற்றும் 19) விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று (பிப்.20) மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. முன்னதாக உயிரிழந்த நான்கு மாணவிகளுக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.

அப்போது அங்கு வந்த உயிரிழந்த மாணவியின் பெற்றோர் ஒருவர், உடற்கூராய்வு அறிக்கை இதுவரை ஒப்படைக்கப்படவில்லை எனக் கூறினார். மேலும், உயிரிழந்த தனது மகளின் உடற்கூராய்வு அறிக்கையை ஒப்படைத்துவிட்டு, பள்ளியைத் திறந்து கொள்ளுங்கள் எனவும் வாதிட்டார். இதற்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகள், பெற்றோர் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில் திடீரென பள்ளி ஆசிரியை ஒருவர், பெற்றோரின் காலில் விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், காலில் விழுவது முறையல்ல எனவும், தான் அரசு அதிகாரிகளை மதிப்பதாகவும் தெரிவித்தார். இதனால் பிலிப்பட்டி பள்ளியில் பரபரப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: காவிரி ஆற்றில் 4 மாணவிகள் மரணம்; அனுமதியின்றி உடற்கூராய்வு என பெற்றோர் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.