புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் குறிப்பிட்ட சமுதாயத்தை இரண்டு பேர் இழிவாக பேசிய ஆடியோ, வாட்ஸ் ஆப்-இல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு சமுதாயத்தினர், வாட்ஸ் ஆப்-இல் அவதூறாக பேசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என நேற்று காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது நடந்த மோதல்,கல்வீச்சில் 13 பேர் காயமடைந்தனர். போலீஸ் வாகனங்களும் கல் வீச்சில் சேதம் அடைந்தன. இதனால் நேற்று முதல் நாளை நள்ளிரவு வரை பொன்னமராவதி வட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொன்னமராவதி மோதல் தொடர்பாக 1000 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கற்கள் வீசி தாக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 விழுக்காடு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.