புதுக்கோட்டை: ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு, 30 முதல் 35 பிரசவங்கள் செய்யப்படும். இந்நிலையில் அங்குப் பிரசவிக்கும் பெண்களிடம் பணியாளர்கள் குறிப்பிட்டத்தொகையினை லஞ்சமாகப் பெறுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து சிலர் சமூக வலைத்தளங்களிலும் வீடியோ ஆதாரங்களைப் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் அங்குப் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக, மருத்துவமனையின் நிரந்தர பணியாளர் மாரிக்கண்ணு (45) என்பவரை பணியிடை நீக்கம் செய்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பூவதி உத்தரவிட்டுள்ளார்
இந்த ராணியார் அரசு மருத்துவமனைக்குப் பிரசவத்திற்காக வந்த ஒரு பெண்மணியிடம் மாரிக்கண்ணு, 300 ரூபாய் லஞ்சம் பெற்றது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவரை மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இனிமேல் அங்கு இது போன்ற லஞ்சம் பெரும் சம்பவம் நடக்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கஞ்சா பதுக்கிய மூன்று பெண்கள் கைது; 22 கிலோ கஞ்சா பறிமுதல்