ETV Bharat / state

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24ஆவது ஆண்டாக பதிவைப் புதுப்பித்த நபரை கலாய்த்து புதுக்கோட்டையில் ரகளையான பிளக்ஸ்! - Pudukkottai employment office flex

புதுக்கோட்டை மாவட்டத்தில் 24ஆவது முறையாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பை புதுப்பித்த நபரை கலாய்த்து அவரது நண்பர்கள் வைத்துள்ள பிளக்ஸின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Pudukkottai employment office flex
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24ஆவது ஆண்டாக பதிவைப் புதுப்பித்த நபரை கலாய்த்து புதுக்கோட்டையில் ரகளையான பிளக்ஸ்
author img

By

Published : Feb 15, 2021, 4:55 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அசோக் நகரில் வசித்துவரும் ஆனந்தராஜ், ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது, அவருக்கு 38 வயது ஆகியிருக்கும் சூழலில் அண்மையில், 24ஆவது முறையாக பதிவு மூப்பை புதுப்பித்துள்ளார். இதனை கலாய்த்து அவரது நண்பர்கள், அவருக்கு பிளக்ஸ் ஒன்றை வைத்துள்ளனர்.

அதில், புதுக்கோட்டை மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெற்றிகரமாக 24ஆவது முறையாக பதிவை புதுப்பித்த எங்களது நண்பர் ஆனந்தராஜுக்கு வாழ்த்துகள். இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து நலன்விசாரிப்புக் கடிதம்கூட வரவில்லை என்று நக்கலாக வாசகத்தை அடித்துள்ளனர். மேலும், இப்படிக்கு வேலையில்லா இளைஞர்கள் என்றும் அந்தப் பிளக்ஸில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து நாம் ஆனந்தராஜை தொடர்புகொண்டு கேட்டபோது, "தற்போது, டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். அண்மையில், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பித்தது குறித்து பேசிக்கொண்டிருந்தேன். தற்போது, என்னை கலாய்ப்பதற்கும், விளையாட்டுத்தனமாகவும் எனது நண்பர்கள் இந்த பிளக்ஸை வைத்துள்ளனர். இதில், எவ்வித உள்நோக்கமும் இல்லை. அரசு கருணை காட்டி எனக்கு வேலை கொடுக்கவிட்டாலும், இனிவரப்போகும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்" என்றார்.

விளையாட்டாக அவரது நண்பர்கள் இந்த பிளக்ஸை வைத்தாலும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களின் நிலையைதான் அந்த பிளக்ஸ் எடுத்துக்காட்டுகிறது.

இதையும் படிங்க: மக்களுக்கு கொடூர பரிசளிக்கும் மோடி அரசு - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.