புதுக்கோட்டை மாவட்டத்தில், கரோனா வைரஸ் தொற்றைப் பரவாமல் தடுக்கும் வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் நேற்றைய தினம் புதுக்கோட்டை நகராட்சி, லெட்சுமி நகரில் சென்னை கோயம்பேட்டிலிருந்து வந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, தற்பொழுது திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சி, லெட்சுமி நகர் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வெளியிலிருந்து வாகனங்கள் உள்ளே செல்லாத வகையிலும், உள்ளிருக்கும் நபர்கள் வெளியில் வராத வகையிலும் 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பகுதியைச் சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தினந்தோறும் தேவைப்படக் கூடிய அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று அப்பகுதியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க...விபத்து ஏற்பட்ட விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலை யாருடையது?