விவசாயிகள் அனைவருக்கும் நடப்பு காரீப் பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு காப்பீடு ப்ரீமிய கட்டணம் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 503 ரூபாய், துவரை பச்சைப்பயறு மற்றும் உளுந்து உள்ளிட்ட பயறுவகை பயிர்களுக்கு 260 ரூபாய், நிலக்கடலைக்கு 432 ரூபாய், கம்புக்கு 148 ரூபாய், வாழைக்கு 2,308 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இணையதள சேவையை நாடி வந்தனர். பயிர் காப்பீடு செய்வதற்கு டிசம்பர் 15ஆம் தேதிதான் கடைசி நாள். ஆனாலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே இணையதள சேவை இயங்கவில்லை. இதனிடையே தனியார் நிறுவன இணையதள சேவைகளும் இயங்காததால் விவசாயிகள் கடும் பாதிப்புகுள்ளாகினர்.
இதனால், கடும் கோபத்திற்கு ஆளான விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், இது குறித்து விவசாயிகளிடம் கேட்கையில், ’பயிர் காப்பீடு செய்வதற்கான நாட்கள் மிகக் குறைவு. இணைய தள சேவையும் இயங்கவில்லை, அதிலும் கடைசி இரு தினங்கள் விடுமுறை என கூறுகின்றனர். தமிழ்நாடு அரசு உடனடியாக விவசாயிகளின் நிலையை கவனத்தில் கொண்டு பயிர்காப்பீடு செய்வதற்கான நாட்களை நீட்டிப்பு செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: மக்கள் நன்றாக வாழ காவடி எடுத்த குமரி காவல் துறை அலுவலர்கள்